வைத்தியரின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சிவரூபனை விடுவிக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர்.

பளைப் பிரதேச மக்களால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.

பளை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நடை பவனியாக பளைப் பிரதேச செயலகம் வரை சென்றதுடன் அங்கு ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலக அதிகாரியிடம் கையளித்தனர்.

‘வைத்தியரை விடுதலை செய்’, ‘நிறுத்து நிறுத்து சட்டத்தின் முன் நிறுத்து’, ‘நீக்கு நீக்கு பயங்கரவாத சட்டத்தை நீக்கு’ என்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.

அத்துடன் வைத்தியரை சட்டத்தின் முன் நிறுத்தாத பட்சத்தில் பாரியளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்