நாட்டின் நலன்களை கருத்திற் கொண்டு 19வது திருத்தம் கொண்டு வரப்படவில்லை

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அதிகார போட்டியினை ஏற்படுத்தியுள்ள அரசியலமைப்பின் 19வது திருத்தம் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முழுமையாக மாற்றியமைக்கப்படும். நாட்டின் நலன்களை கருத்திற் கொண்டு 19வது திருத்தம் கொண்டு வரப்படவில்லை ஒரு குடும்பத்தை இல்லக்காக கொண்டே இத்திருத்தம் அமுல்படுத்தப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 


Recommended For You

About the Author: Ananya