ஒரே இன பாலின ஜோடியில் ஒருவர் கர்ப்பம்

நான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார். ஜனவரியில் குழந்தையை எதிர்பார்க்கிறோம் என நியூஸிலாந்து மகளிர் கிரிக்ெகட் அணித் தலைவி தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பவர் 32 வயதான எமி சாட்டர்வைட். சிறந்த சகலதுைற வீராங்கனையான இவர் நியூஸிலாந்து அணிக்காக 119 ஒருநாள் போட்டிகளிலும், 99 இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அத்தோடு நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு வீராங்கனையான 28 வயதுைடய லீ தகுகு 66 ஒருநாள் போட்டியிலும், 50 இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தினர். பின்னர் அன்பு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதேபோல் 2017ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது லீ தகுகு கர்ப்பமாக உள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என மகிழ்ச்சியாக டுவிட்டர் பக்கத்தில் எமி சாட்டர்வைட் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

எமி சாட்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எங்களது முதல் குழந்தையை வரும் ஜனவரி மாதம் எதிர்பார்க்கிறோம். இந்த செய்தியை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். புது வாழ்க்கை குறித்து நாங்கள் அடையும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகளே இல்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு தகுகு ‘‘நாங்கள் மூன்று பேர்’’ என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.

நியூஸிலாந்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரே பாலினத்தினர் திருமணம் செய்து கொள்ளலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.‌


Recommended For You

About the Author: Ananya