முன்னாள் கணவர் வீட்டை தீ மூட்ட முயன்ற பெண்

முன்னாள் கணவன் வீட்டை தீயிட்டு கொழுத்த முற்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் Avoudrey, (Doubs) நகரில் இடம்பெற்றுள்ளது. 49 வயதுடைய பெண் ஒருவர் தனது முன்னாள் கணவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். முதலில் அவருடன் பேசுவதற்காக சென்றிருந்தார் எனவும், ஆனால் பேச்சுவார்த்தை முடிந்து வாக்குவாதம் ஆரம்பித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் அங்கிருந்து வேகமாக வெளியேறியுள்ளார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து, கேன் ஒன்றில் பெற்றோல் எடுத்துக்கொண்டு மீண்டும் அவ்வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவரது வீட்டினை தீயிட்டு கொழுத்தும் நோக்கில் அவர் அங்கு வந்ததாக அறியமுடிகிறது.

ஆனால் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழ முன்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள அவர், விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.


Recommended For You

About the Author: Ananya