சிறை செல்ல தயார்

நான் குற்றவாளியென்றால் சிறைக்குச் செல்ல தயாரென அமைச்சர் சஜித் பிரேதமாஸ தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்தவர்கள் பௌத்த மதத்துக்காக எதனை செய்துள்ளார்கள்.

பௌத்த அறநெறி கல்வி நிலையங்கள், செயலிழந்து சென்றுக்கொண்டிருந்தப்போது அதனை உயிர்ப்பிக்க  எவரும் நினைக்கவில்லை.

தலதா மாளிகையிலுள்ள புத்தர் சிலை கீழே விழும் நிலைமை உருவானபோது அதனை நிறுத்தி மேலோங்கச் செய்தவர் ரணசிங்க பிரேமதாஸ.

அவரது மகனாகிய நான், முன்னைய காலங்களை காட்டிலும் பௌத்த அறநெறிகள், விகாரைகள் புனரமைப்பு உட்பட பல்வேறு பௌத்த அபிவிருத்தி செயற்பாடுகளை அதிகளவு செய்து வருகின்றேன்.

ஆனால் என்னை குற்றவாளிகள் போல சிலர் பார்ப்பதுடன் அரச நிதியை வீண்விரயம் செய்வதாகவும் சித்தரிக்கின்றனர்.

விகாரைகளைக் கட்டுவதுதான் குற்றம் என நினைப்பவர்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நீங்கள் தவறு என்றாலும் நான் நிச்சயம் செய்வேன். இதற்காக  சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்