ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணி விடுவிப்புடன் தொடர்புடைய விடயதானங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சின் கீழ் உள்ளடங்குகின்றன.

இந்தநிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் அதுகுறித்தும் இன்றைய தினம் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்