சம்பூரில் வன்னித்தம்பிரான் வழிபாடு.!!

பாலை மரத்தில் வீற்றிருந்து பசு மாடுகளை காவல் காப்பதாக நம்பப்படுவதன் அடிப்படையில் பாலை மரத்தின் கீழ் பந்தல் அமைத்து நெய் பந்தம் எரிய வைத்து மடை வைத்து பொங்கல் பொங்கச்செய்து படைத்து வழிபட்டு வருகின்றனர் .

இவ்வழிபாடு தொடர்பாக நிலவிவரும் ஐதீக்க கதையின் பிரகாரம் முன்னூற்றொரு வதனமார்.

பயணம் செல்கின்ற வேளை ஒரு வதனமார் காணாமல் போவதாகவும் அவரை மீண்டும்தேடி வருகின்ற வேளை பாலைமரத்து உச்சியில் தேன் எடுத்து சுவைத்துக்கொண்டிருந்த்தாகவும் , தேடி வந்தவர்களை கண்டவுடன் அவர்களையும்தேன் உண்ண அழைக்கவும்அவர்கள் மறுத்து அவரை அப்படியே இருக்கும்படி
மானிடர்கள் அந்தரத்தில் மடை வைத்து திறந்து பார்க்காமல் பொங்கிப்படைத்து வழிபாடியற்றுவர் என அவரை காட்டுப்பகுதியில் விட்டுச்சென்றதாகவும் அவரும் அவ்வனப்பகுதியிலையே தங்கி பிரதேசத்து பசுக்களுக்கு நோய் பிணி ஏற்படா வண்ணம் காவலாக வீற்றிருப்பதனால் அவரை வழி வழியாக எமது மக்கள்  வணங்கி வருகின்றனர் . மிகவும் பய பக்தியுடன்இவ வழிபாடு எங்கள் சம்பூரணப்பதியில் இடம்பெற்று வருகிறது .

எமது மரபுகளும் பாரம்பரியமுமே சம்பூரின் தனி அழகு .

சம்பூர் தமிழ்க் கிறுக்கன்


Recommended For You

About the Author: Editor