கடற்படை பணியாளரின் எலும்புக்கூடு மீட்பு!

மின்னேரியாவில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு ,திருகோணமலை கடற்படை தளத்தில் பணியாற்றி காணாமல் போன இளைஞர் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

இறந்தவர் ஹங்குரங்கெத்தவை சேர்ந்த 27 வயதான மாலித குமார விபுலசிறி என அடையாளம் காணப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் குறித்த இளைஞர் காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருகோணமலை கடற்படை தளத்தில் பணியாற்றி வந்த குறித்த இளைஞர் விட்டிலிருந்து பணிக்கு புறப்பட்ட பின்னர் கடற்படை தளத்திற்கு செல்லவில்லை.

இந்நிலையில் அவர் வீட்டிற்கும் திரும்பிவராத நிலையில் , ஹங்குரங்கெத்த பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்தனர்.

இதையடுத்து மின்னேரிய பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டிற்கு அருகிலிருந்த தொலைபேசியின் மூலம், இறந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேலதிக ஆய்விற்காக எலும்புக்கூடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor