வீட்டுக் கூரையில் மிகப்பெரிய தேன் கூடு!

அவுஸ்ரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையில் இருந்து மிகப்பெரும் தேன் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் இருந்து 50 கிலோகிராம் தேன் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்ரேலியாவின் தேனீ வளர்பாளரான போல் வூட் என்பவர் பிறிஸ்பேன் நகரின் சுபுர்பன் எனும் இடத்தில் அமைந்துள்ள பெண்ணொருவரின் வீட்டுக் கூரையில் இருந்து குறித்த மிகப்பெரும் தேன் கூட்டைக் கண்டு பிடித்துள்ளார்.

ஏறக்குறைய 10 மாதங்கள் அக்கூடு அங்கு இருந்ததாகவும், அதில் 60 ஆயிரம் வரையிலான தேனீக்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

குறித்த தேன் கூட்டில் இருந்து 50 கிலோ கிராம் தேன் பெறப்பட்டுள்ளது.

வீட்டுக் கூரையில் இருந்து கூட்டை அகற்றிய பின்னர், தேனீக்கள் அனைத்தினையும் தனது தேனீ பண்ணைக்கு எடுத்துச் சென்றுள்ளார் போல் வூட்.

வீட்டுக்கூரையில் இருந்து தேன்கூட்டை அகற்றும் குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.


Recommended For You

About the Author: Editor