திரையுலகில் அறிமுகமாகும் விக்ரம் மருமகன்!

ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் விக்ரம் மகன் துருவ். அவரைத் தொடர்ந்து விக்ரம் மருமகன் அர்ஜுமன் ‘பப்ஜி’ (pubg) திரைப்படம் மூலம் களம் காண்கிறார்.
‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (pubg) என்ற டைட்டிலின் சுருக்கிய வடிவமே பப்ஜி. பிக் பாஸ் போட்டியாளர்களான ஐஸ்வர்யா தத்தா, ஜூலி ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார். இவர் இயக்கத்தில் ஏற்கெனவே தாதா 87 திரைப்படம் வெளியான நிலையில் தற்போது ‘பீட்ரு’ என்ற மற்றொரு படம் தயாராகிவருகிறது.
பப்ஜி படத்தில் அர்ஜுமன் இணைந்தது குறித்து பேசியுள்ள இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, “நான் முதலில் அர்ஜுமனை விளம்பர மாடல் என்று நினைத்தேன். பின்னர் தான் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறார் என்பது தெரிந்தது.
அவரது தோற்றமும் முக்கியமாக ஹேர் ஸ்டைலும் எனது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. திரைக்கதையை எழுதியபின் படத்தில் நடிக்க அவரிடம் கேட்டேன்” என்று கூறியுள்ளார்.
விக்ரமிம் மருமகன் என்று அப்போது தனக்கு தெரியாது என இயக்குநர் விஜய் கூறியுள்ளார். “மிக தாமதமாகவே அவரது தோற்றம் நடிகர் விக்ரமின் சாயலில் இருப்பதை உணர்ந்தேன். அப்போதுதான் அர்ஜுமன் தான் விக்ரமிம் தங்கை மகன் என்று கூறினார்.”
ஐஸ்வர்யா தத்தாவுக்கு எதிராக போராடும் விதமாக அர்ஜுமனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பப்ஜி என்ற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் பிராஞ்ச் ஆபிஸராக நடிக்கிறார்.
ஜூலியும், தாதா கதிரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன

Recommended For You

About the Author: Editor