Mahindra மற்று Ideal Finance கூட்டாண்மையில் புதிய முயற்சி

இலங்கையின் முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களுள் ஒன்றான Ideal Group இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான ஒரு துணை நிறுவனமான Ideal Finance Ltd நிறுவனத்துடன் கூட்டு வர்த்தக முயற்சியொன்றை ஸ்தாபித்துள்ளது.

நிதிச் சேவைகள் துறையில் Mahindra Finance நிறுவனத்தின் 25 ஆண்டு கால அனுபவம் மற்றும் உள்நாட்டில் Ideal Finance நிறுவனத்தின் சந்தை அறிவு இணைந்த இந்த கூட்டாண்மை வர்த்தகமானது இலங்கையில் சந்தை முன்னிலை வகிக்கும் நிதிச்சேவைகள் வர்த்தகத்தைக் கட்டியெழுப்பும் அனுகூலத்தைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கிராமப்புற மற்றும் அரைநகர்ப்புற சந்தைகளில் கவனம் செலுத்தியவாறு, முன்னிலை வகிக்கின்ற வங்கிச்சேவை அல்லாத ஒரு நிதி நிறுவனமாகத்திகழ்ந்து வருகின்ற Mahindra Finance தனது சர்வதேச வளர்ச்சி மூலோபாயத்தின் ஒரு அங்கமாக வெளிநாட்டுச் சந்தைகளுக்கு தனது தொழிற்பாடுகளை விஸ்தரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

வர்த்தகச் செயற்பாடுகளுக்கான டிரக் வண்டிகள், மோட்டார் கார், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், தங்கக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் ஆகியவற்றை அதன் கடன் வழங்கல் துறை உள்ளடக்கியுள்ளதுடன், IFL கவனம் செலுத்தியுள்ள சந்தைப்பிரிவை பிரதிநிதித்துவம் செய்வதை வெளிப்படுத்துகின்றது.

IFL நிறுவனம் ரூபா 4.4 பில்லியன் சொத்துத் தளத்தையும், ரூபா 1.1 பில்லியன் பங்குத் தளத்தையும் கொண்டுள்ளது. 10 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், அவற்றுள் 9 கிளைகள் மேல் மாகாணத்திற்கு வெளியில் யாழ்ப்பாணம், அனுராதபுரம், குருணாகல், பண்டாரவளை, எம்பில்லிப்பிட்டிய, மொனராகலை, எல்பிட்டிய, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கிச்சேவை அல்லாத ஒரு நிதி நிறுவனமான Ideal Finance Ltd. (IFL), 2012 மார்ச்சில் தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்திருந்ததுடன், கிராமப்புறம் மற்றும் அரைநகர்ப்புற துறைகளில் தெளிவாக கவனம் செலுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor