தீப்பற்றி எரியும் அமேசான் காடுகள்!!

பிரேசிலில் உள்ள அமேஸான் காடுகள் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் அழிவுக்கு உள்ளாகின்றமை மனிதகுலத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரேசிலில் உள்ள அமேஸான் மழைக் காடுகள் இந்த வருடம் பல முறை பற்றி எரிந்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகாமை குறிப்பிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு தரவுகளோடு ஒப்பிடுக்கையில் இவ்வாண்டு மழைக் காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது 83 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக அந்த முகாமையில் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இந்த வருடத்தின் எட்டாம் மாதம் வரை அமேஸானில் 72 ஆயிரம் முறைகள் காட்டுத் தீ சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரேசிலில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக செயற்கைக்கோள் ஔிப்படங்கள் வெளியானதை அடுத்து அண்மையில் அந்தநாட்டு ஜனாதிபதி ஜயர் போல்சனாரோ பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகாமையின் தலைவரை பணிநீக்கம் செய்தார்.

மேலும் அந்த ஔிப்படங்களை பொய்யானவை என்று பிரேசில் ஜனாதிபதி குறிப்பிட்டார். இப்படியான சூழலில் இந்த தரவுகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor