
செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செங்கோடன் துரைசாமி தயாரிப்பில் நடிகை கஸ்தூரி நடித்துள்ள ‘இ.பி.கோ.302’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியது.
இந்தப் படத்தில் நடிகை கஸ்தூரி கதையின் கதாநாயகியாக, ‘துர்கா ஐ.பி.எஸ்.’ என்ற ஒரு பொலிஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
இளம் காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா இருவரும் அறிமுகமாகியிருக்கிறார்கள்.
சலங்கை துரை இயக்கத்தில் தண்டபாணி இசையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் சலங்கை துரை ஏற்கெனவே கரண் நடித்து வெற்றி பெற்ற ‘காத்தவராயன்’ என்ற படத்தை இயக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கஸ்தூரி, நாகசக்தி, ராபின் பிரபு, ஹனி ரோஸ், கதிர், வயபுரி, வின்ஸ் குமார், வர்ஷிதா, கிரேன் மனோகர், போண்டா மணி உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்னர்