அமெரிக்காவை எச்சரித்த ஈரான்!!

வளைகுடாவில் ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவிலேயே அமெரிக்க இராணுவம் உள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏதாவது ஏற்பட்டால் பெற்றோல் ஒரு பீப்பாயின் விலை 100 டொலர்களுக்கும் மேல் உயர்த்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.

இவ்வாறு ஈரான் அயதுல்லா காமேனி அரசாங்கத்தின் இராணுவ உயரதிகாரியான ரஹீம் சஃபாவி தெரிவித்ததாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உயர் ராணுவ அதிகாரியான யாஹ்யா ரஹீம் சஃபாவி இது குறித்து பேசுகையில், ”ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க இராணுவ வாகனங்கள் உள்ளன. எங்கள் படையின் முழுமையான பலம் என்னவென்று அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும்.

இது பாரசீக வளைகுடாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க மற்றும் வெளிநாட்டு கடற்படையினருக்கும் நன்கு தெரியும்.

பாரசீக வளைகுடாவில் முதல் சூடு நடத்தப்படும்போது எண்ணெய் விலை 100 டொலருக்கும் மேலாக உயரும். இது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு தாங்க முடியாததாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரகசிய அணு ஆயுதத் திட்டத்தில் ஈடுபடுவதாக ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டியது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை நிறுத்துவதற்காக முயன்ற அமெரிக்கா சர்வதேச தடைகளுக்கும் வழிவகுத்தது. எனினும் இத்தடை நீக்கப்பட ஈரானும் உலக வல்லரசும் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டன.

ஆனால் இவ் ஒப்பந்தத்திலிருந்து திடீரென வொஷிங்டன் வெளியேறிய நிலையில் ஒரு ஆண்டுக்குப் பின்னர் ஈரானும் அமெரிக்காவும் கடந்த மாதம் முதலே கடும் மோதலுக்குத் தயாராகி வருகின்றன.

இதனால் மத்திய கிழக்குப் பகுதிகளில் போர் உருவாகும் சூழ்நிலை உருவாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor