சித்திரவதைக்குள்ளான 60 பெண்கள் நாடு திரும்பினர்.

தொழில் நிமித்தம் குவைத்திற்கு சென்று, அங்கு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான பெண்களில் 60 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய அவர்கள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நாடு திரும்பியதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களில், அந்நாட்டின் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 45 பேரும் அடங்குவதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குவைத் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பிலிருந்த 15 பேரும் இன்று நாடு திரும்பியவர்களில் அடங்குவதாகவும் அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பணிப்பெண்களாக குவைத்திற்கு சென்ற மேலும் 173 பேர் குவைத் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்