பிணைக்காலம் நீடிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் பிணைக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணைக்காலத்தை நீடிக்ககோரி நளினி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன் மகளின் திருமணத்திற்காக கடந்த மாதம் 25ஆம் திகதி பிணையில் விடுதலையானார்.

இந்நிலையில், நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், பிணைக்காலத்தை காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவில், மகளின் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பிணைக்காலத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்