2018 மோசமான ஆண்டு

தனிப்பட்ட முறையில் 2018ஆம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டு என கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் அணிகளுக்காக விளையாடிய ரொனால்டோ தற்போது இத்தாலியிலுள்ள யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.

இந்தநிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் ரொனால்டோவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே 2018ஆம் ஆண்டு மிகவும் கடினமாக அமைந்தது என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

‘ரசிகர்கள் நன்மதிப்பு குறித்து கேள்வி எழுப்பும்போது, அது காயத்தை ஏற்படுத்துகிறது.

ஏனென்றால், எனக்கு மிகப்பெரிய குடும்பம் உள்ளது. எனது மனைவி, அறிவார்ந்த குழந்தைகள் ஏராளமான விஷயங்களை புரிந்து கொண்டுள்ளனர்.

மீண்டும் ஒருமுறை என்னுடைய அப்பாவித்தனம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது என்னை பெருமைப்பட வைக்கிறது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்