கொழும்பில் படகு சேவை

கொழும்பு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொம்பெனித்தெரு முதல் கோட்டை வரையான பகுதியில் உள்ள வாவியில் பயணிகள் படகு சேவையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்தார்.

இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த படகு சேவையில் ஒரு மாதத்திற்கு இலவசமாக பயணிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்த படகு சேவையின் ஊடாக குறித்த தூரத்தை 9 – 10 நிமிடங்களில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த படகு சேவை அனைத்துவித பாதுகாப்புடனும் இலங்கை கடற்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்