கண்டி விரைந்தார் கர்தினால்!

நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆதரவு தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுத்துள்ள அதுரலியே ரத்தன தேரரை இன்று (திங்கட்கிழமை) சந்தித்த மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த ரஞ்சித் ஆண்டகை, “நியாயமான போராட்டத்தை ஆரம்பித்துள்ள தேரருக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும்.

மேலும் தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யாரென்பது குறித்து எந்ததொரு விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டுமென்ற எண்ணத்தில் போராட்டத்தை ஆரம்பித்துள்ள தேரரின் நியாயமான கோரிக்கைக்கு உரிய தீர்வை அரசாங்கம் பெற்றுகொடுக்க வேண்டும்.

ஆகையால் தேரரின் போராட்டத்துக்கு நானும் எனது ஆதரவினை தெரிவிக்கின்றேன்” என ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor