தமிழகத்தில் எங்கும் மழை!!

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, மதுரை போன்ற உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

சென்னையில் சில பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். பகலில் அதிகபட்ச வெப்பநிலை 104 பாகை பரனைட் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

பகல் நேரங்களில் உள் மாவட்டங்களில் வெப்ப தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை நேரங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என எதிர்வுகூரப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: Editor