எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயார்.

எதிர்காலத்தில் நாட்டில் நடாத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நேற்றைய தினம் புதன்கிழமை ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குள் நிலவும் பிரச்சினைகளை தீர்த்து இந்த வருடத்தில் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடமாக அரசாங்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபை தேர்தலை நடத்துவது பற்றி தற்போதே அரசாங்கம் சிந்திப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்