அவசர பொலிஸ் சேவை பாரபட்சம்

தமிழர்கள் விடயத்தில் அவசர பொலிஸ் சேவை பாரபட்சமாக செயற்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளதாக அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

காரைதீவில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “கடந்த 9ம் திகதி இனந்தெரியாத நபர்களினால் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது நான் உடனடியாக அவசர பொலிஸ் பிரிவினருக்கு தகவல் வழங்கினேன்.

எனினும் இந்த சம்பவம் இடம்பெற்று தற்போது இரண்டு கிழமைகள் ஆகியும் இந்த விடயம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அச்சுறுத்தல் காரணமாக நான் எனது உறவினரின் வீட்டிலேயே தங்கியுள்ளேன்.

இந்நிலையில், மக்களின் அவசர உதவிக்கு உள்ள அவசர பொலிஸ் சேவை தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயற்படுகிறதா என்ற ஐயப்பாடும் எழுகின்றது” என மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்