ஆலய சூழலில் வைத்து இராணுவ வீரர் செய்த செயல்

முன்னேஸ்வரம் ஆலயம் அமைந்துள்ள புனித பகுதியில் விற்பனைக்காக கேரளா கஞ்சாவை கொண்டு வந்த நபர், கஞ்சாவுடன் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் சிலகாலம் இராணுவத்தில் தொழில் புரிந்து வந்துள்ளார். போரில் அவரது காலில் குண்டு பாய்ந்து கால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

நிக்கவரொட்டிய பிரதேசத்தை சேர்ந்த இந்த சந்தேக நபர் ஹெட்டிபொல பிரதேசத்தில் கேரள கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து கஞ்சாவை கொள்வனவு செய்து, அதனை பல இடங்களுக்கு விற்பனை செய்து வருபவர் எனவும் முன்னேஸ்வரம் ஆலயம் அமைந்துள்ள புனித பிரதேசத்திற்கு கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வரவுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய நடத்திய தேடுதலில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


Recommended For You

About the Author: Ananya