மொத்த குடும்பமும் தற்கொலை

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெற்றோருடன் இளம் பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே வைப்பின் பகுதியிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

54 வயதான சுபாஷ், அவரது மனைவி 53 வயதான கீதா மற்றும் இவர்களது மகள் 24 வயதான நயனா ஆகிய மூவருமே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மேற்கொண்ட சோதனையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் எழுதிய கடிதமும் சிக்கியுள்ளது.

சுபாஷின் சகோதரர் சுரேஷ் திங்களன்று பகல் குடியிருப்புக்கு தேடிச் சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வேலை நிமித்தம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு சென்ற நயனா பின்னர் மாயமானதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தில், பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டு, அங்குள்ள பொலிசார் நயனாவை மீட்டுள்ளனர். தொடர்ந்து கடந்த ஞாயிறன்று நயனா கேரளா திரும்பியுள்ளார். இந்த நிலையிலேயே பெ ற்றோர் உள்ளிட்ட மூவரும் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

சுபாஷ் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், இந்த முடிவுக்கு வேறு எவரும் காரணம் இல்லை என்றும், மூவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட முடிவே இது எனவும் குறிப்பிட்டிருந்தனர். நயனாவுக்கு பெங்களூருவில் என்ன நடந்தது, ஏன் நயனா மாயமானார் உள்ளிட்ட கேள்விகளுக்கு உரிய விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Ananya