தமிழர் பகுதியில் விதானையாரின் திருவிளையாடல்கள்

வாகரைப் பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளர் அஷ்கர் வாகரை தட்டுமுனை பகுதியில் கடமையாற்றும் போது மக்களுக்கு கொடுத்த வெள்ள நிவாரண பணத்தினை திருடியமை அம்பலமாகியுள்ளது.

சமைத்த உணவு வழங்குவதற்காக வழங்கப் பட்ட பணத்தில் 45000 திருடி எடுத்துள்ளாராம்.

மிகுதி திரட்டுப் பணத்தை வாழைச்சேனை நாவலடி சந்தில் சம்பவ தினம் 5 மணிக்கு பெற்று மிச்சம் ரூபா 407200 காசை ஆட்டோவுல கொண்டு சில முக்கிய அதிகாரிகள் பங்கு போட்டுள்ளனர்.

இதில் இருந்து தப்புவதற்காக ஓட்டமாவடி அமைச்சர் ஒருவரின் உதவியை நாடியுள்ளாராம். இந்த தகவல் இன்று தான் வெளியாகியுள்ளது.

ரிதிதென்னயில் இருந்து வேலைக்கு செல்லும் இவர் அவரது பகுதிகளின் கடமை நேரங்களில் தனது பகுதியல் நிற்பதை தவிர்த்து ஓட்டமாவடி ரயர் கடையில் தான் தன் நேரத்தை செலவிடுவதாக கூறும் அப்பகுதி மக்கள் இவரது நடவடிக்கையை எந்த ஒரு அரசியல் தலைவரும் கண்டு கொள்வதில்லை என்பதுடன் அரச அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor