யாழ் நவாலி வடக்கில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்!!

நவாலி வடக்கில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பல் வாள்வெட்டில் ஈடுபட்டதுடன், வீட்டின் தளபாடங்களை பெற்றோல் ஊற்றி எரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக இளைஞனொருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் நவாலி வடக்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் சத்தியசீலன் சயந்தன் (வயது 20) என்பவரே கையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

முகத்தை துணியால் மூடியவாறு வாள்களுடன் மோட்டார் சைக்கிளொன்றில் வந்த மூவரே வீட்டிலிருந்த பொருட்களை சேதமாக்கியதுடன், அவற்றைப் பெற்றோல் ஊற்றி எரித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இளைஞனை வெட்டிக் காயப்படுத்திச் சென்ற அவர்கள் மூவரையும் அடையாளம் காணமுடியவில்லை என தெரிவித்த மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor