அமைச்சரவைத் தீர்மானம் குறித்து ஆளுநரிடம் கேட்க முடியாது

தன் கட்சிக்காரருக்கு ஒரு நியாயம்
ஏழு தமிழருக்கு இன்னொரு நியாயம்
இதுதான் தமிழக அரசின் நியாயம்?

மாணவிகளை எரித்துக் கொன்ற தன் கட்சிக்காரர்களை விடுதலை செய்த தமிழக அரசு, ஆயுள் தண்டனை என்றால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று ஏழு தமிழருக்கு கூறியது.

இப்போது ஏழுபேர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தள்ளது.

அப்படி என்றால் எதற்காக தீர்மானம் நிறைவேற்றியது தமிழக அரசு? தான் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானம் குறித்து தானே விளக்கம் கேட்க முடியாது என்றால் அதன் அர்த்தம் என்ன?

ஒருபுறம் தீர்மானம் நிறைவேற்றி ஏழுபேர் விடுதலையை விரும்புவதாக காட்டிக் கொண்டு மறுபுறம் ஆளுநருடன் சேர்ந்து தீர்மானம் குறித்து விளக்கம் கேட்க முடியாது என்று நாடகம் போடுகிறது.

பெட்டிக்கடைகூட நடத்த லாயக்கற்ற டயர் நக்கிகளிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால் இப்படித்தான் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் ஊழல் செய்து பணம் சுருட்டுவதில்தான் குறியாக இருக்கிறார்களேயொழிய  தமிழர் நலனில் துளிகூட அக்கறை காட்டுவதில்லை.


Recommended For You

About the Author: Editor