நல்லூரில் மின்சாரம் தாக்கியதில் முதியவர் காயம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதியில்  மின்சாரம் தாக்கிய நிலையில் முதியவரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
நல்லூர் ஆலய வீதியில் மின்சாரம் தாக்கிய நிலையில் செல்லத்துரை ஜெகநாதன் (வயது – 64) என்ற முதியவர் இன்று காலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சுகநலத்துடன் உள்ளார்” என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கமரா ஸ்டான்ட்டில் மழை காரணமாக மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அதிலையே குறித்த முதியவர் சிக்குண்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்