
இவ்வார இறுதியில் இடம்பெற உள்ள G7 மாநாட்டின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 – 45 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் என மொத்தம் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், Biarritz நகரில் ஓகஸ்ட் 24, 25, 26 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ள இந்த மாநாட்டின் போது, ஜோந்தாமினர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். Tours (Indre-et-Loire) மற்றும் Cape Breton (Landes) ஆகிய நகரங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜோந்தாமினர்கள் தங்கியிருக்கும் அலுவலகங்களை இவர்கள் குறிவைத்ததாகவும், சமூகவலைத்தளமூடாக தகவல் பரிமாற்றம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஐவரும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.