பெண் ஒருவரின் சடலம் மீட்பு

அம்பாறை திருக்கோவில் விநாயகபுரம் -3  பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் விநாயகபுரத்தைச் சேர்ந்த 37 வயதான கிருஷ்ணபிள்ளை மாலினி என்ற 3 பிள்ளைகளின் தாய் என திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். ஜயவீர தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் நேற்றைய தினம் காணாமல் போயிருந்த நிலையில், கிராம வாசிகளால் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது திருக்கோவில் பகுதியில் உள்ள களப்பு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும்  தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Ananya