தேவாலயத்தில் இருந்து இரண்டு காண்டாமணிகள் திருட்டு..!!

Ver மாவட்டத்தின் சிறிய கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருந்து இரண்டு காண்டாமணிகள் திருடப்பட்டுள்ளன.

Var மாவட்டத்தின் Esparron-de-Pallières எனும் 350 பேர் வசிக்கக்கூடிய சிறிய கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது ஒரே மாதத்தில் இடம்பெறும் இரண்டாவது திருட்டுச் சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூலை மாத நடுப்பகுதியில் 80 கிலோ மற்றும் 53 கிலோ எடையுள்ள இரண்டு மணிகள் திருடப்பட்டிருந்தன.

இதில் 53 கிலோ எடையுள்ள இரண்டாவது மணி ‘1737’ ஆம் ஆண்டைச் சேர்ந்தது எனவும் வரலாற்று நினைவுச்சின்னம் எனவும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் திருடப்பட்ட இரண்டு மணிகளும் சில நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. மணிகளை விற்கவோ, ஏலத்தில் விடவோ முடியாது என்பதால் திருடர்கள் மணியை கைவிட்டுவிட்டனர்.

ஆனால், இச்சம்பவம் இடம்பெற்று ஒரு மாதங்கள் ஆன நிலையில், கடந்தவார இறுதியில் 85 கிலோ எடைகொண்ட காண்டாமணிகள் மீண்டும் திருடப்பட்டுள்ளன.

1847 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த காண்டாமணிகளும் வரலாற்று நினைவுச்சின்னம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor