பரிசில் போதை மாத்திரைகள் கடத்திய நபர்கள் கைது!!

பரிசில் வீதி கண்காணிப்பில் ஈடட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர், பெருமளவான போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் place Auguste Baron பகுதியில் நேற்று திங்கட்கிழமை காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

23:00 மணியளவில் அவர்கள் மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மகிழுந்துக்குள் சந்தேகப்படும்படியான நால்வர் பயணித்துள்ளனர். அவர்களை சோதனையிட்டபோது மகிழுந்துக்குள் போதை மாத்திரைகள் கடத்திச் சென்றதை கண்டுபிடித்துள்ளனர்.

மொத்தமாக 592 மாத்திரகளை அவர்கள் கடத்திச் சென்றுள்ளனர். நால்வரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.


Recommended For You

About the Author: Editor