சிறைச்சாலை மேற்பார்வையாளர்கள் மீது தாக்குதல்!

மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் மீது கைதி ஒருவரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Val-de-Marne நகரில் உள்ள Fresnes சிறைச்சாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை காலை இங்குள்ள சிறை கைதி ஒருவன் இரும்பு கம்பி ஒன்றை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்துள்ளான்.

சிறைச்சாலை மேற்பார்வையாளர்கள் வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, குறித்த கைதி இருக்கும் அறைக்குச் சென்றனர்.

அப்போது எதிர்பாரா விதமாக அவன் மேற்பார்வையாளர்களை இரும்பு கம்பி மூலம் தாக்கியுள்ளான்.

பின்னர் அவன் ஒருவழியாக தடுத்து நிறுத்தப்பட்டு, மடக்கி பிடிக்கப்பட்டான். தொடர்ந்து கைதியை ஒழுக்காற்றல் பிரிவுக்கு அழைத்துச் சென்று தடுத்துவைக்கப்பட்டான்.

இச்சம்பவத்தில் மூன்று மேற்பார்வையாளர்களும் காயமடைந்தனர். அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பத்து நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor