ரிஷாட் வீட்டில் அதிரடிப்படையினர் விசேட சோதனை!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு சொந்தமாக புத்தளம், வில்அடி பிரதேசத்திலுள்ள வீட்டில் பொலிஸ் அதிரடிப்படையினர் விசேட சோதனை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சோதனையை நேற்று (திங்கட்கிழமை) நடத்தியுள்ளதாகவும் இந்த சோதனையின்போது எந்த சந்தேகத்திற்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் ஆயுதங்கள் வைத்திருப்பதாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் பொலிஸ் தலையைகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட முறைப்பாட்டு பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டுக்கமைய குறித்தசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது


Recommended For You

About the Author: Editor