
ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தமட்டில் சஜித்தினுடைய வருகை தொடர்பான கேள்வியொன்று இருக்கிறது.
ரணில் இருக்கும்வரை அவரது முடிவே செல்லும் என்பதை தாண்டி நுட்பமாக சாதிக்கக்கூடியவர் .
அனுரகுமார திஸாநாயக்கா கட்டுக்கோப்பான கட்சிப்பாங்கான அரசியலுக்குள் பயணிப்பவர் ,இலங்கையில் இன்றளவில் கொள்கைக்காக அரசியல் செய்யும் கட்சியினை சார்ந்தவர் என்றாலும் சிங்கள மக்களில் பெரும்பாலோனோர் JVP யினையும் அதன் கொள்கைகளையும் ஏற்கப்போவது கிடையாது.
அநுர நேர்மையான அரசியல்வாதி ஆளுமையுள்ளவர் என்ற அடிப்படையில் அமையவுள்ள கூட்டணியில் பொது வேட்பாளராக அவரை ஏற்றுக்கொண்டால் ஐக்கியதேசிய கட்சி இரண்டு பட வேண்டிய அவசியமில்லாத்துடன் இலகுவான வெற்றியையும் பெற்றுக்கொள்ள முடியும் .
அத்தோடு நல்லாட்சி அரசால் இயலாமல் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒழிப்பு முறையும் கைக்கூடும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுள் இன்னுமொரு கட்டத்தை எட்டவும் வாய்ப்பிருக்கிறது .