அகில, வில்லியம்சன் பந்துவீச்சில் சந்தேகம்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜய மற்றும் நியூஸிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோர் பந்து வீசும் முறை சட்டவிரோதமானது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்து சர்வதேச கிரிக்கெட் சபையிடம் மீண்டும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அடுத்து வரும் 14 நாட்களுக்குள் இருவரும் பந்துவீசும் முறை தொடர்பில் சோதனை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான  முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இவர்கள் இருவரின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor