சரித்திரம் நம்மகிட்ட இருந்துதான் தொடங்கணும்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களுக்கு இணையாக இன்னொரு திரைப்படம் இந்தியாவில் வருமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் அந்த இரு படங்களுக்கும் சவால் விடும் வகையில் அமைந்துள்ள படம் தான் ‘சயிர நரசிம்மரெட்டி’ என்பது இந்த படத்தின் டீசரில் இருந்தே தெரிகிறது

ஜான்சி ராணி, பகத்சிங், மங்கள் பாண்டே போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சரித்திரம் நினைவில் வைத்துள்ளது. ஆனால் சரித்திரத்தில் மறந்துபோன பல தியாகிகள், வீரர்கள் இந்த நாட்டில் உண்டு. அவர்களில் ஒருவர்தான் இந்த சயிர நரசிம்மரெட்டி என்ற அறிமுகத்துடன் இந்த படத்தின் டீசர் ஆரம்பமாகிறது

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர முரசு கொட்டிய வீரரான சயிர நரசிம்மரெட்டியை பார்த்து ஆங்கிலேயர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘அவரு சிங்கம் மாதிரி துரை, அவர்தான் அவங்க தைரியம் துரை’ என்று ஆங்கிலேயர்களிடமே அவரது பெருமை எடுத்து கூறப்படுகிறது. அப்படி ஒரு மாவீரனின் கதைதான் இந்த படம்

பிரமாண்டமான போர் காட்சிகள், சிரஞ்சீவியின் ஆவேசமான நடிப்பு, அபாரமான கிராபிக்ஸ் காட்சிகள், ஆகியவை இந்த படத்தின் ஹைலைட்டாக உள்ளது. 97 நொடி டீசரில் சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப், தமன்னா, விஜய்சேதுபதி, ஜெகபதிபாபு ஆகிய முக்கிய கேரக்டர்கள் அனைவரும் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர். அதிர வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள் அதிர வைக்கின்றன,.

சரித்திரத்தில் நாம் இல்லாமல் போகலாம் ஆனால் சரித்திரம் நம்மகிட்ட இருந்துதான் தொடங்கணும் என்ற சிரஞ்சீவியின் வசனம் மெய்சிலிர்க்க வைக்கின்றது. மொத்தத்தில் ஒரு அபாரமான விஷூவல் ட்ரீட் ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது என்பதே இந்த படத்தின் டீசரில் இருந்து தெரிய வருகிறது


Recommended For You

About the Author: Editor