கமல்ஹாசனுடன் முதல்முறையாக காமெடி நடிகர்

உலக நாயகன் கமல்ஹாசனும், பிரபல காமெடி நடிகர் விவேக்கும் கே.பாலசந்தர் பள்ளியில் இருந்து வந்திருந்தாலும் இதுவரை இணைந்து நடிக்காத நிலையில் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

‘இந்தியன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் இணைந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நடிகர் விவேக் ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’, ‘அந்நியன்’ மற்றும் ‘சிவாஜி’ ஆகிய படங்களில் விவேக் நடித்திருந்த போதிலும் கமல்ஹாசனுடன் முதல்முறையாக விவேக் இணைகிறார். கே.பாலசந்தர் இயக்கிய ‘பார்த்தாலே பரவசம்’ படத்தில் கமல், விவேக் இருவரும் நடித்திருந்தாலும் இருவரும் இணைந்த காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் தற்போது ரகுல் ப்ரித்திசிங், ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் விரைவில் கமல்ஹாசனும் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐம்பது நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்னும் ஒன்றரை மாதத்தில் கமல்ஹாசன் முழுநேர படப்பிடிப்பில் ‘இந்தியன் 2’ மற்றும் ‘தலைவன் இருக்கின்றான்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor