மூவர் கூட்டணியில் மோதல்

கவின் தலைமையிலான ஐவர் கூட்டணிக்கும் வனிதா தலைமையிலான மூவர் கூட்டணிக்கும் இடையே பிக்பாஸ் வீட்டில் பனிப்போர் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. எந்த கூட்டணியை எப்படி கவிழ்க்கலாம், எப்படி உடைக்கலாம் என இருதரப்பும் திட்டம் தீட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வனிதா, கஸ்தூரி மற்றும் சேரன் ஆகிய மூவரும் கவின் கூட்டணியின் முதுகெலும்பை உடைப்பது குறித்து திட்டம் தீட்டி வந்த நிலையில் இன்று அந்த மூவர் கூட்டணியிலேயே திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.

வனிதாவை கஸ்தூரி ‘குண்டு’ என்று கூறி கேலி செய்ததாக தெரிகிறது. இதனையறிந்த வனிதா, கஸ்தூரியை வெளுத்து வாங்குகிறார். தான் மூன்று குழந்தைகளுக்கு அம்மா என்றும் தன்னுடைய மூத்த பையனுக்கு 18 வயது ஆகிறது என்றும் ஆனால் தான் பார்க்க அப்படியா இருக்கின்றது என்று கூறி, தன்னை எப்படி கஸ்தூரி கேலி செய்யலாம் என்று வெளுத்து வாங்க, அவரை சமாளிக்க முடியாமல் கஸ்தூரி தடுமாறுகிறார்.

வனிதா-கஸ்தூரி சண்டையில் ஐவர் கூட்டணியினர் தலையிடாமல் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor