வனிதா பள்ளி செல்லும் குழந்தையா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க்காக பள்ளி மாணவர்கள் போல் ஹவுஸ்மேட்ஸ் நடித்து வருகின்றனர். கஸ்தூரி பள்ளியின் டீச்சராகவும், ஆசிரியராக சேரனும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மாணவ, மாணவிகளாகவும் நடித்து வருகின்றனர்.

கஸ்தூரியை ஆரம்பத்தில் இருந்தே கலாய்த்து வரும் சாண்டி இந்த டாஸ்க்கிலும் விட்டுவைக்கவில்லை. கஸ்தூரியை டீச்சர் அல்ல, சத்துணவு ஆயா என்று கூறி கலாய்க்கின்றார். அதேபோல் ஷெரின் மாணவியாக இருக்கும்போதும் தர்ஷனிடம் ரொமான்ஸ் செய்வது, லாஸ்லியாவின் தொடரும் அழுகை, கவினின் சேட்டை, வனிதாவின் அடாவடித்தனம் ஆகியவை இந்த டாஸ்க்கிலும் தொடர்கிறது.

மொத்தத்தில் இந்த டாஸ்க் காமெடி என நினைத்து ஹவுஸ்மேட்ஸ் நடித்து கொண்டிருந்தாலும் பார்வையாளர்களுக்கு பெரும் சோதனையாக இந்த டாஸ்க் இருக்கும்போல் தெரிகிறது. குறிப்பாக வனிதாவை பள்ளிச்சீறுடையில் பார்க்கும் கொடுமை பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Recommended For You

About the Author: Editor