யாழ் மக்களிற்கு மகிழ்சியை ஏற்படுத்திய மைத்திரி

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டின் குடிதண்ணீர்ப் பிரச்­சி­னைத் தீர்வுக்காக தயா­ரிக்­கப்­பட்­டுள்ள மாற்றுக் குடி­நீர்த் திட்­டப் பணி­ எதிர்­வ­ரும் 30ம் திகதி ஆரம்­பிக்கப்ப­ட­வுள்­ளது.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்பாண குடிநீர் திட்ட பணிகளை ஆரம்­பித்து வைக்­க­வுள்­ளார்.

கடந்த 2018 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்­பித்து இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறை­வ­டைய வேண்­டிய இந்­தத் திட்­டம் வன­ உ­யி­ரி­கள் திணைக்­க­ளத்­தின் முட்­டுக்கட்­டை­யால் ஓராண்டு தாம­த­மாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்காக ஒன்றினைவோம் செயற்திட்டத்தின் மூலமாக இந்த குடிநீர் திட்டப் பணிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

யாழ்ப்­பா­ணம் குடி­தண்­ணீர்ப்பிரச்­சினை நீண்ட காலமாக பலதரப்பினராலும் பேசப்­பட்டது. அதற்­குப் பல்­வேறு தீர்­வு­க­ளும் முன்­வைக்­கப்­பட்­டன.

இர­ணை­ம­டு­வி­லி­ருந்து குடி­தண்­ணீ­ரைக் கொண்­டு­ வ­ரு­தல், வட­ம­ராட்சி கிழக்­கி­லி­ருந்து கடல் நீரை நன்­னீ­ராக்­குதல் உள்ளிட்ட பல்­வேறு திட்­டங்­கள முன்­மொ­ழி­யப்­பட்­ட­போ­தும், அதி­லுள்ள அர­சி­யல் இழு­ப­றி­கள் கார­ண­மாக எந்­த­வொரு திட்­ட­மும் இன்னும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இந்த நிலை­யில் ‘மாற்­றுக் குடி­நீர்த் திட்­டம்’ என்ற பெய­ரில், வட­ம­ராட்சி நீரே­ரி­யில் உள்ள நீரை குளத்­தில் தேக்கி விநி­யோ­கிக்­கும் திட்­டம் தயா­ரிக்­கப்­பட்­டது. 2 ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா செல­வில் இந்­தத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட உள்­ளது.


Recommended For You

About the Author: Editor