ஒரே நேரத்தில் கருத்தரித்த 9 தாதிகளுக்கு குழந்தைகள் பிறந்தன!

அமெரிக்காவில் தனியார் மருத்துவமனையொன்றில் பணிபுரிந்து வந்த 9 தாதியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்து ஒரே காலகட்டத்தில் குழந்தைகளை பிரசவித்துள்ள அபூர்வ நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் ‘மைன் மெடிக்கல் சென்டர்’ என்ற தனியார் மருத்துவமனையில் இந்த அபூர்வ நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அங்கு பணியாற்றும் தாதியர்கள் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்து மகப்பேற்றுக்காக எதிர்பார்த்திருந்தனர்.

இதையடுத்து கர்ப்பிணி தாதியர்கள் 9 பேரும் ஒன்றாக இருக்கும் ஔிப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு “எங்கள் மருத்துவ நிலையத்தின் 9 தாதிகள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி இருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தது..

இந்த ஔிப்படம் கடந்த மாதங்களில் சமூக வலைத்தளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சமூக வலைத்தள ஆர்வலர்கள் தாதியர்களுக்கு வாழ்த்துக்கூறி அந்த ஔிப்படத்தை பகிர்ந்தனர்.

இந்த நிலையில் அந்த தாதியர் 9 பேருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் பிறந்தன.

நர்சுகள் 9 பேரும் தங்களது குழந்தைகளுடன் ஆரோக்கியமாக இருக்கும் ஔிப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த ஔிப்படம் அதிக ‘விருப்பு’களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor