கட்டையால் அடித்து நபர் ஒருவர் கொலை

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுகொல்லவத்த பகுதியில் நபர் ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொம்பஹவெல பகுதியை சேர்ந்த 37 வயதுடைய சமன் சில்வா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Ananya