பளை வைத்தியரை விடுவிக்க கோரி போராட்டம்

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் வைத்தியர் எஸ். சிவரூபன்  நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு  கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைதான பளை வைத்தியசாலை வைத்தியரின் விடுதலையை வலியுறுத்தியும், பதில் வைத்தியரை நியமிக்க கோரியும் மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் பளை வைத்தியசாலை முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்