நாட்டுக்கு வர முடியாமல் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் குடும்பம்!!

தாய் நாட்டுக்கு வர முடியாமல் டுபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கை குடும்பம் தொடர்பில் மத்திய கிழக்கு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மொஹமட் பெராட் அப்பாஸ் என்ற நபரும் அவரது மனைவியான இஷாரா விஜேதுங்க, அவரது 5 வயது மற்றும் 6 வயதுடைய பிள்ளைகளே இவ்வாறு டுபாயில் சிக்கியுள்ளனர்.

மொஹமட் பெராட் அப்பாஸ், 2008ஆம் ஆண்டில் இருந்து டுபாய் தனியார் நிறுவனம் ஒன்றில் சேவை செய்துள்ளார். 2016ஆம் ஆண்டு அவர் தனது தொழிலை இழந்துள்ளார். பின்னர் பெடார் அப்பாஸ் மற்றும் அவரது மனைவி இணைந்து பல்வேறு வர்த்தகங்களை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்களால் லாபத்தினை பெற முடியாமல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் போயுள்ளது. கடனை செலுத்தாமல் இலங்கைக்கு செல்ல அவர்களுக்கு  அரசாங்கம் தடை விதித்துள்ளது. கடன் சுமை காரணமாக 10 மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ள இஷாரா விஜேதுங்கவுக்கு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் பிள்ளைகள் இருவருடன் அந்த குடும்பத்தினர் இலங்கை வர வேண்டும் என்றால் அதற்கு 52000 டிராம் பணம் செலுத்த வேண்டும். அவர்களின் விசா காலமும் காலாவதியாகியுள்ளதாக குறிப்பிடக்கின்றது. பெற்றோரின் கடன் சுமை காரணமாக பிள்ளைகளுக்கு கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நண்பர்களினால் வழங்கப்பட்ட சிறிய அறை ஒன்றில் இந்த குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். எவ்வித வருமானமும் இன்றி கடன் செலுத்துவது எவ்வாறு என்ற சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சர்வதேச ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Ananya