8 இலட்சம் பெறுமதியான மரத் துண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குபட்பட்ட புலிபாய்ந்தகல் கோராவெளி பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மரத்துண்டுகள் நேற்று (18) மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மரங்கள் கொண்டுவரப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நடவடிக்கையின் பயனாக மரத்துண்டுகள் புலிபாய்ந்தகல் கோராவெளி பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.

புலிபாய்ந்தகல் கோராவெளி பகுதியில் இருந்து வெட்டப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட தொன்னூற்றி மூன்று மரத்துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதன் பெறுமதி எட்டு இலட்சம் ரூபாய் இருக்கலாம் எனவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சட்டவிரோதமான மரத்துண்டுகள் கொண்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மரங்களை ஏற்றி வந்த வாகனமும் தனது நேரடி நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Ananya