கோர விபத்து

நுவரெலியாவில் இருந்து நீர்கொழும்பு பகுதிக்கு சென்ற உந்துருளியும் கினிகத்தேன பகுதியில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த கார் வண்டியோடு உந்துருளி மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலியாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 19.08.2019.திங்கள் கிழமை காலை 11மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிர் இழந்த நபர் நுவரெலியா பகுதியை சேர்ந்த  22வயதுடைய எம்.பி.அஸ்வின் என்ற இளைஞனே உயிர் இழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் கார் சாரதி அட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு
சந்தேக நபரை நாளையதினம் அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது.

 


Recommended For You

About the Author: Ananya