காதலியை மீட்க காதலன் செய்த செயல்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காதலியை மீட்க கணவனுக்கு 71 ஆடுகளை இழப்பீடாக வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கோரக்பூர் பகுதியிலேயே இளைஞர்கள் இருவரின் பிரச்னையை தீர்க்க 71 ஆடுகளை இழப்பீடாக வழங்க கிராம சபை உத்தரவிட்டுள்ளது.

திருமணம் முடிந்த இளம்பெண் காதலனுடன் மாயமானதே பிரச்னைகளுக்கு துவக்கமாக அமைந்துள்ளது.

ஆனால் கணவரின் குடும்பத்தினர் இருவரையும் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும், கணவருடன் தாம் வாழ முடியாது என அந்த இளம்பெண் அடம்பிடித்துள்ளார்.

தொடர்ந்து கணவனும் அந்த காதலனும் வாக்குவாதத்தில் ஏற்பட்டதுடன், கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து கிராமத் தலைவர்களிடம் இந்த பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் விசாரித்த பின்னர்,

ஆடுகளை வழங்கி காதலன் தமது காதலியை சொந்தமாக்கினார். ஆனால் காதலன் தமது காதலியை திரும்ப பெற அளித்த ஆடுகள் அனைத்தும் குடும்ப சொத்து எனவும், அதில் தமது கருத்தினை அவர் கேட்கவில்லை என்றும் அவரது தந்தை தற்போது பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தமது மகன், குடும்ப சொத்தில் இருந்து 71 ஆடுகளை திருடிவிட்டார் எனவும், அந்த ஆடுகளை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் பொலிசார் விசாரணையில் உள்ளது.

 

 


Recommended For You

About the Author: Ananya