மரத்தில் மோதி விபத்து.!!

Créteil நகரில் நபர் ஒருவர் நோயாளர் காவு வண்டியை திருடிக்கொண்டு சென்றுள்ளார்.

Créteil (Val-de-Marne) இல் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Henri-Mondor மருத்துவமனை வாசலில் நின்றிருந்த SAMU அவசர மருத்துவ வண்டியினை நபர் ஒருவர் திருடிக்கொண்டு சென்றுள்ளார். 32 வயதுடைய குறித்த நபர் Mâcon (Saône-et-Loire) நகரைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.

நோயாளர் காவு வண்டியுடன் தப்பிச் சென்ற அவர் வீதியின் ஓரத்தில் நின்ற மரத்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அதில் அவர் காயமடையவில்லை. மாறாக வாகனத்தில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சில மணிநேரங்களின் பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். நபரின் இந்த செயற்பாட்டுக்குரிய காரணத்தினை அறியமுடியவில்லை


Recommended For You

About the Author: Ananya