
நேற்று அதிகாலை 1:50 மணிக்கு இந்த தீ பரவ ஆரம்பித்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். Levallois-Perret நகரில் உள்ள குறித்த சந்தை கட்டிடம் தற்போது முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். தீ மிக வேகமாக பரவியதை அடுத்து வீரர்கள் மேலதிகமாக வரவழைக்கப்பட்டனர். மொத்தமாக 160 தீயணைப்பு படையினர் களத்தில் போராடினர்.
இந்த விபத்தில் எவரும் காயமடையவில்லை. மூன்று மணிநேர போராட்டத்தின் பின்னர் காலை 5:30 மணி அளவில் தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.
இந்த தீ சம்பவத்தை தொடர்ந்து, 90 பேர் வரை வசிக்கக்கூடிய அருகில் இருந்த கட்டிடம் ஒன்றில் இருந்து அனைவரும் வெளியேறப்பட்டனர். அக்கட்டிடத்திலும் பெருவாரியான சேதங்கள் ஏற்பட்டுள்ளது